Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெருங்குடியில் வீட்டு கதவு பூட்டை உடைத்து கொள்ளை

பெருங்குடியில் வீட்டு கதவு பூட்டை உடைத்து கொள்ளை

பெருங்குடியில் வீட்டு கதவு பூட்டை உடைத்து கொள்ளை

பெருங்குடியில் வீட்டு கதவு பூட்டை உடைத்து கொள்ளை

ADDED : அக் 03, 2011 10:49 PM


Google News

பெருங்குடி : வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் லேப்-டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.பெருங்குடி, குறிஞ்சி நகர், 14வது குறுக்கு தெருவில் உள்ள சக்தி அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் சீனிவாசராவ், 29.

இன்ஜினியரான இவர் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள, தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி சீனிவாசராவ் தன் மனைவியுடன் ஆந்திர மாநிலம், கூடூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.அதே பிளாட்டில் வசிக்கும் சிலர், சீனிவாசராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர். இதையடுத்து, பெருங்குடி திரும்பிய அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது.அதில் வைத்திருந்த, 93 கிராம் தங்க நகைகள், சாமி அறையில் வைத்திருந்த வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த லேப்-டாப், கேமரா உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சீனிவாசராவ் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.இரும்புலியூரில் கொள்ளை: தாம்பரம், இரும்புலியூரில் சப்தகிரி பிளாட்ஸ் உள்ளது. இங்கு எட்டு வீடுகள் உள்ளன. சாப்ட்வேர் இன்ஜினியரான திலிப்குமார், 26. மின்சார ரயில் டிரைவர் மூர்த்தி ஆகியோர், இரண்டு வீடுகளில் குடும்பத்தாருடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திலிப்குமார், வீட்டை பூட்டி விட்டு செங்கல்பட்டிற்கு சென்றார். மூர்த்தி குடும்பத்தாருடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றார்.நேற்று முன்தினம் இரவு, இந்த அப்பார்ட்மென்டில் புகுந்த மர்ம நபர்கள், ஆறு வீடுகளுக்கும் வெளியில் தாழ்பாள் போட்டு விட்டு, திலிப்குமார் மற்றும் மூர்த்தியின் வீட்டு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்தனர். இதில், மூர்த்தி வீட்டில் எதுவும் சிக்கவில்லை. பின், திலிப்குமார் வீட்டில் இருந்த எட்டு சவரன் நகைகளை திருடிச் சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us