/உள்ளூர் செய்திகள்/சேலம்/"ஆன்-லைன்' மூலம் வேலை வாய்ப்புபதிவில் அப்-டேட் ஆகாததால் குழப்பம்"ஆன்-லைன்' மூலம் வேலை வாய்ப்புபதிவில் அப்-டேட் ஆகாததால் குழப்பம்
"ஆன்-லைன்' மூலம் வேலை வாய்ப்புபதிவில் அப்-டேட் ஆகாததால் குழப்பம்
"ஆன்-லைன்' மூலம் வேலை வாய்ப்புபதிவில் அப்-டேட் ஆகாததால் குழப்பம்
"ஆன்-லைன்' மூலம் வேலை வாய்ப்புபதிவில் அப்-டேட் ஆகாததால் குழப்பம்
ADDED : செப் 08, 2011 02:22 AM
சேலம்:சேலம் மாவட்டத்தில், வேலை வாய்ப்புக்கு பட்டபடிப்பு, பட்ட
மேற்படிப்புகளை, ஆன்-லைன் மூலம் பதிவு செய்த பலருக்கு, பதிவு விபரங்கள்
'அப்-டேட்' செய்யப்படவில்லை. ஆன்-லைன் பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கலால்,
மாணவ, மாணவியர் திணற வேண்டியுள்ளது.தமிழக அரசு, மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகங்களை கம்ப்யூட்டர் மயமாக்கியுள்ளது. எஸ்.எஸ்.எல்.ஸி., பிளஸ் 2,
பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் பயிற்சி,
பட்டயப்படிப்புகள் முடித்தவர்கள், ஆன்-லைன் மூலமாக பதிவு செய்ய வசதி
ஏற்படுத்தப்பட்டது. மாணவர், மாணவியர் அவரவர் பகுதிகளில் இருந்தே, ஆன்-
லைனில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து வருகின்றனர்.மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தை முற்றுகையிட்டு பதிவு செய்த நிலை மாற்றப்பட்டு, பள்ளி,
கல்லூரிகளில் வேலைவாய்ப்பை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு பதிவு அட்டை எண்ணை கொண்டு, மாணவ, மாணவியர் கூடுதல் பதிவு,
புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை, ஆன்-லைன் மூலம் செய்து
வருகின்றனர்.
பெரும்பாலானவர்களின் வேலை வாய்ப்பு பதிவுகளில், ஏற்கனவே பதிவு
செய்யப்பட்ட படிப்புகள், 'அப்-டேட்' செய்யப்படாமல் உள்ளது. கூடுதல் கல்வி
தகுதியை ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவியர்
ஏற்கனவே பதிவு செய்த கல்வி தகுதியை காணாமல் திடுக்கின்றனர். அதேபோல,
முகவரி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பழைய முகவரி உள்ளதாலும், கூடுதல்
கல்வி தகுதியை பதிவு செய்ய அச்சப்படுகின்றனர்.
கல்வி தகுதி விடுபட்டும், பழைய முகவரியுடன் இருப்பதாலும், ஆன்-லைன் மூலம்
பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகள்,
ஆன்-லைன் மூலம் செய்யப்படும் வேலை வாய்ப்பு பதிவுகளை 'அப்-டேட்'
செய்தால்தான், வீண் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.


