ADDED : அக் 07, 2011 10:04 PM
கள்ளந்திரி தலைவர் பதவிக்கு அதே ஊரை சேர்ந்த அம்பலகாரர் முத்துராமலிங்கம் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.
அங்கு நடந்த ஊர் பஞ்சாயத்து கூட்டத்திலும் இதுபற்றி தெரிவித்தனர். முதலில் அனைவரும் அதை ஆமோதித்தனர். வேட்புமனு தாக்கலின் போது அவரை எதிர்த்து மகேந்திரன் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பலர் மனுதாக்கல் செய்தனர். பஞ்சாயத்தார் சார்பில் மரத்தடியில் நடந்த கூட்டத்தில் அனைவரும் வாபஸ் வாங்க வேண்டும் என அம்பலகாரர் தெரிவித்தார். யாரும் வாபஸ் வாங்கவில்லை. தற்போது அங்கு நான்கு பேர் களத்தில் உள்ளனர்.


