ADDED : அக் 04, 2011 10:27 PM
தேவகோட்டை:தேவகோட்டையில் அ.தி.மு.க.
தேர்தல் அலுவலக திறப்பு விழா முன்னாள் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ராமநாதன் தலைமையில் நடந்தது. காரைக்குடி தொகுதி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம் திறந்து வைத்தார். வேட்பாளர் சுமித்ரா வரவேற்றார்.மாவட்ட செயலாளர் முருகானந்தம், எம்.எல்.ஏ. பழனிச்சாமி,முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன், மாவட்ட தலைவர் காளிதாசு, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பையா,நகர செயலாளர் ராமச்சந்திரன்,வக்கீல் குமாரவேலு, முன்னாள் நகர செயலாளர் தனசேகரன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் காசிலிங்கம், பங்கேற்றனர். நகர ஜெ.பேரவை துணை செயலாளர் காட்டுராஜாஜெகதீசன் நன்றி கூறினார். அமைச்சர் கோகுல இந்திரா வேட்பாளர் சுமித்ராவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.


