ADDED : அக் 07, 2011 10:23 PM

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் தங்க.தமிழ் செல்வனுக்கும் பனிப்போர் நிலவுகிறது.
போடி, ஆண்டிபட்டி, தேனி தொகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தங்க. தமிழ்செல்வன் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் நொந்து போய் உள்ளனர். வேட்பாளர் தேர்வில் தங்க.தமிழ்செல்வன் கை ஓங்கி விட்டது என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அமைச்சரின் ஆதரவாளர்கள்,'தங்க. தமிழ்செல்வனை சுற்றியிருக்கும் சிலர், அமைச்சரின் செயல்பாடுகள் அனைத்திற்கும் உள்நோக்கம் கற்பித்து, அவரிடம் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர்,' என சமாளிக்கின்றனர்.


