/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் நிம்மதியாக வாழ வழிசெய்வேன்சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் நிம்மதியாக வாழ வழிசெய்வேன்
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் நிம்மதியாக வாழ வழிசெய்வேன்
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் நிம்மதியாக வாழ வழிசெய்வேன்
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் நிம்மதியாக வாழ வழிசெய்வேன்
ADDED : அக் 07, 2011 12:08 AM
ராமநாதபுரம் : ''ராமநாதபுரம் நகராட்சியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என, நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் கூறினார்.
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: எனக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை கண்டு தற்போது மாற்று கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. முதல்வர் ஜெ., பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி வரும்நிலையில், நகராட்சியிலும் அரசு சார்ந்த தலைவர் இருந்தால்தான், நலத்திட்டங்கள் தடையின்றி எளிதில் கிடைக்கும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மேலும் தி.மு.க.,வினரால் மக்கள் பல்வேறு இன்னல்கள் அடைந்ததை, நான் செல்லும் இடங்களில் கூறி வருத்தப்படுகிறார்கள். மக்களும் பகிரங்கமாக 'தமிழக முதல்வர் அடையாளம் காண்பித்த நபருக்குதான் ஓட்டளிப்போம்' என கூறுகின்றனர். மக்களின் பேராதரவோடு நான் தலைவராகும் பட்சத்தில், மக்கள் எதிர்பார்த்த அனைத்து பணிகளையும் தடையின்றி நிறைவேற்றுவேன். குறிப்பாக அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். ரேஷன் கடைகளில் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் நோய்நொடியின்றி நிம்மதியாக வாழ வழிசெய்வேன், என்றார். தொகுதி செயலாளர் முருகேசன், நகர்செயலாளர் அங்குச்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட நிர்வாகி சாமிநாதன், நகர் துணை செயலாளர் ஆரிப்ராஜா, வக்கீல் ஹரிதாஸ், வீரபாண்டியன், நகராட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி உட்பட பலர் உடன் சென்றனர்.


