ADDED : செப் 08, 2011 11:54 PM
விழுப்புரம் : டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்தும், கோர்ட் வளாகங்களில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று வழக்கறிஞர்கள் கோர்ட் பணிகளை புறக்கணித்தனர். தொடர்ந்து இன்றும் (9ம்தேதி) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


