Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நிலம் விற்பனையில் ரூ.2 கோடி மோசடி : திருத்தங்கல் பெண் உட்பட 3 பேர் கைது

நிலம் விற்பனையில் ரூ.2 கோடி மோசடி : திருத்தங்கல் பெண் உட்பட 3 பேர் கைது

நிலம் விற்பனையில் ரூ.2 கோடி மோசடி : திருத்தங்கல் பெண் உட்பட 3 பேர் கைது

நிலம் விற்பனையில் ரூ.2 கோடி மோசடி : திருத்தங்கல் பெண் உட்பட 3 பேர் கைது

ADDED : ஜூலை 16, 2011 04:56 AM


Google News

திருநெல்வேலி : கடையநல்லூரில் நிலம் விற்பனை செய்வதாக ஏமாற்றிய திருத்தங்கலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கம்பநேரி, புதுக்குடியில் வீட்டுமனைகளை தவணை முறையில் விற்பனை செய்யும், 'விஜயா கருடா ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். மாதந்தோறும் 200 ரூபாய் வீதம் 45 மாதங்கள் செலுத்தினால், வீட்டுமனை பத்திரப்பதிவு செய்து தரப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார்.

இதற்காக கடையநல்லூரில் செயல்பட்ட அலுவலகத்தில் கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி, சங்கரன் கோவிலைச் சேர்ந்த ஆவுடையப்பன், திருத்தங்கலைச் சேர்ந்த சசிக்குமார், மணி உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். பலரிடம் மாதந்தோறும் பணம் வசூல் செய்து வந்தாலும், யாருக்கும் நிலம் கொடுப்பதற்கான பத்திரப்பதிவு செய்து தரவில்லை.

இதுகுறித்து, கடையநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி சண்முகத்தாய், போலீசில் புகார் செய்தார். மாவட்ட எஸ்.பி., விஜயேந்திர பிதரி உத்தரவின் பேரில் போலீசார் விசாரித்தனர். நில விற்பனையில் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து, ஆவுடையப்பன், கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி, சசிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். விசாரணையில், 2 கோடி ரூபாய் மதிப்பில் மோசடி நடத்திருப்பது தெரியவந்தது. எனவே, அவர்களிடம் இருந்து 49 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், ஒரு ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us