Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஒழுக்கமானவர்களுக்கு ஓட்டு நல்லிணக்க கமிட்டி தீர்மானம்

ஒழுக்கமானவர்களுக்கு ஓட்டு நல்லிணக்க கமிட்டி தீர்மானம்

ஒழுக்கமானவர்களுக்கு ஓட்டு நல்லிணக்க கமிட்டி தீர்மானம்

ஒழுக்கமானவர்களுக்கு ஓட்டு நல்லிணக்க கமிட்டி தீர்மானம்

ADDED : அக் 07, 2011 10:33 PM


Google News

ராஜபாளையம் : உள்ளாட்சி தேர்தலில் ஒழுக்கமானவர்களுக்கு ஓட்டு அளியுங்கள், என, ராஜபாளையத்தில் நடந்த இந்து சமுதாய நல்லிணக்க கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நவராத்திரிவிழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, கமிட்டி சார்பில் நடந்த துர்கா பூஜைக்கு சமூக தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

கடற்கரை முன்னிலை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரம சுவாமிஜி முக்தானந்தா ஆசி வழங்கினார். ஆர்.எஸ்.எஸ்., மக்கள் தொடர்பாளர் இளங்குமார் சம்பத் உள்பட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் பேசினர். இரவில் துர்கா ஊர்வலம் நடந்தது. முடிவில், உள்ளாட்சி தேர்தலில் கட்சி முக்கியமல்ல, ஒழுக்கமானவர்களுக்கு ஓட்டு அளிக்கவேண்டும். அரசு அலுவலகங்களில் சரஸ்வதி, விஜயதசமி பூஜைகள் நடப்பதை எதிர்ப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us