Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மணல் வாகனங்கள் செல்ல தடை விதித்த கிராமத்தினர்

மணல் வாகனங்கள் செல்ல தடை விதித்த கிராமத்தினர்

மணல் வாகனங்கள் செல்ல தடை விதித்த கிராமத்தினர்

மணல் வாகனங்கள் செல்ல தடை விதித்த கிராமத்தினர்

ADDED : ஜூலை 23, 2011 09:48 PM


Google News

பழநி : பொருந்தல் கிராமம் வழியே மணல் அள்ளிச்செல்லும் வாகனங்களை கிராமத்தினர் சிலர், கட்டணம் கேட்டு சிறைபிடித்தனர்.

பழநி அருகே பாலாறு பொருந்தலாறு அணையில் மணல் அள்ளும் வாகனங்கள், பொருந்தல் கிராமம் வழியாக வெளியேறுகின்றன. இதற்கான வழித்தடத்தில் உள்ள பாலம், ஆறு மாதங்களுக்கு முன் பெய்த மழையால் சேதமடைந்தது. அப்போது நெடுஞ்சாலை, பொதுப்பணி, உள்ளாட்சி என எந்த துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து கிராம மக்களே, பணம் வசூலித்து பாலத்தை தற்காலிகமாக சீரமைத்தனர். இந்நிலையில் மணல் அள்ளிச் செல்லும் வாகனங்களுக்கு, கிராமத்தின் சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமத்தினர் கட்டணம் வசூலிக்க கலெக்டர் நாகராஜன் தடை விதித்து, பாலத்தைச் சீரமைக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக பிரச்னையில் ஈடுபடுவோர் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பொருந்தல் வழியே மணல் அள்ளி வந்த வாகனங்களை, கட்டணம் கேட்டு கிராமத்தினர் சிலர் சிறைபிடித்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததன. பழநி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு புறப்பட்டனர். போலீசார் வருவதையறிந்த நபர்கள், வாகனங்களை விடுவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us