/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடம் பஸ் ஸ்டாண்டை தரம் உயர்த்த அரசுக்கு கருத்துருபல்லடம் பஸ் ஸ்டாண்டை தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு
பல்லடம் பஸ் ஸ்டாண்டை தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு
பல்லடம் பஸ் ஸ்டாண்டை தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு
பல்லடம் பஸ் ஸ்டாண்டை தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு
ADDED : ஆக 01, 2011 10:00 PM
பல்லடம் : 'பல்லடம் பஸ் ஸ்டாண்டை 'சி' கிளாசில் இருந்து 'பி' கிளாசாக தரம் உயர்த்த, ரூ.1.16 கோடி நிதி ஒதுக்க வேண்டும்,' என, தமிழக அரசுக்கு, பல்லடம் நகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியுள்ளது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்., 67) பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. 1.66 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1987ல் பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டது. மதுரை, கரூர், திருச்சி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை என பல இடங்களில் இருந்து 435 பஸ்கள் வந்து செல்கின்றன. தொழில் வளம் நிறைந்த கோவை, திருப்பூருக்கு மையப்பகுதியில் பல்லடம் அமைந்துள்ளதால், இரவு, பகல் வேறுபாடின்றி பயணிகள் கூட்டம் எப்போதும் நிறைந்து காணப்படும். ஆனால், ஒரே நேரத்தில் 10 பஸ்கள் மட்டுமே நின்று செல்லும் வகையில் 'ரேக்'குகள் அமைக் கப்பட்டுள்ளன. 'ரேக்' வசதி குறைவாக இருப்ப தால் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும் பஸ்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சில நிமிடங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதன் காரணமாக, பஸ் ஸ்டாண்டில் சில நேரங்களில் ஒரு பஸ்சுடன் மற்றொரு பஸ் பின்புறம் மோதும் சம்பவம் நடக்கிறது. 'சி' கிளாஸ் தகுதியுள்ள இந்த பஸ் ஸ்டாண்டை 'பி' கிளாஸ் என தரம் உயர்த்தும் வகையில், கூடுதலாக 17 பஸ்கள் நின்று செல்லும் வகையில் 'ரேக்'குகள் அமைத்தும், பயணிகளுக்கு நிழற் குடை அமைக்கவும், சைக்கிள் ஸ்டாண்ட், உயர்மின் கோபுர விளக்கு மற்றும் கான்கிரீட் ஓடுதளம் அமைக்கவும் மற்றும் கடைகள் கட்டு வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சிகளின் உள்கட்டமைப்பில் விடுபட்ட இனங்கள் நிரப்புதல் திட்டத்தில் ரூ.1.16 கோடி ஒதுக்கக் கோரி, பல்லடம் நகராட்சி சார்பில், சென்னை நகராட்சிகள் நிர்வாக ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.