/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருச்சி - மானாமதுரை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டி தேவைதிருச்சி - மானாமதுரை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டி தேவை
திருச்சி - மானாமதுரை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டி தேவை
திருச்சி - மானாமதுரை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டி தேவை
திருச்சி - மானாமதுரை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டி தேவை
ADDED : ஆக 02, 2011 11:23 PM
சிவகங்கை : திருச்சி - மானாமதுரை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள்,வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை - திருச்சி, திருச்சி - மானாமதுரை இடையே காலை,மாலையில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் மூலம் மானாமதுரை, சிவகங்கையை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிக்கு தினமும் சென்று வருகின்றனர். அதே போன்று திருச்சி, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள், அலுவலர்கள் காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர்.இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பயணிகளின் வருகைக்கேற்ப ரயில் பெட்டிகளில் வசதியை ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும். ஆனால், திருச்சி - மானாமதுரை இடையே செல்லும் பாசஞ்சர் ரயிலில் பாத்ரூம் வசதி இல்லை. குறிப்பாக இந்த ரயிலில் மூன்று பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலில் அவதிப்படுகின்றனர்.ரயில்வே நிர்வாகம் கூடுதலாக 2 பெட்டிகளை இணைக்க வேண்டும். சிவகங்கை வர்த்தக சங்க தலைவர் கருணாநிதி கூறுகையில்,'' இந்த ரயிலுக்கு கூடுதல் பெட்டிகள் இணைப்பது அவசியம். பகலில் ராமேஸ்வரம் - சென்னை இடையே கூடுதலாக பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள், வர்த்தகர்கள் பயன்பெறுவர்,'' என்றார்.