Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு தொண்டர்கள் எதிர்ப்பு : நாகர்கோலில் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு

கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு தொண்டர்கள் எதிர்ப்பு : நாகர்கோலில் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு

கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு தொண்டர்கள் எதிர்ப்பு : நாகர்கோலில் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு

கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு தொண்டர்கள் எதிர்ப்பு : நாகர்கோலில் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ADDED : ஆக 28, 2011 12:15 AM


Google News

நாகர்கோவில் : குமரி கிழக்கு மாவட்ட காங்., தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளதாக கூறி நாகர்கோவில் மாவட்ட காங்., தலைமை அலுவலகத்திற்கு வந்த, ராபர்ட்புரூஸ்க்கு காங்., தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட காங்., தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால் இருந்துவந்தார். அவர் கடந்த வருடம் மரணம் அடைந்ததையொட்டி, தலைவர் பதவி காலியாகாவே இருந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும், வட்டார அளவில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநில தலைமைக்கும், அகில இந்திய தலைமைக்கும் அனுப்பபட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட தலைவர், அல்லது பொறுப்பாளர் நியமிக்கவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பபட்டுள்ளது.



இந்த நிலையில் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, உடனடியாக மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்படவேண்டும். தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடுபவர்கள் பட்டியல் தயாரித்து, உண்மையான காங்., நிர்வாகிகள் பெயர்கள் அதில் இடம் பெற்று தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக தலைமைக்கும், அகில இந்திய தலைமைக்கும் அனுப்பி வைத்து அதன் அடிப்படையில் தேர்தல் களத்தில் ஈடுபட வேண்டும் எனவும், இதில் வட்டார தலைவர்கள், பரிந்துரையின் பேரில் மாவட்ட பொறுப்பாளரோ, தலைவரோ பரிந்துரை செய்து அதன் அடிப்படையில் தேர்தலில் நிற்பவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவேண்டும் எனவும் கூறியிருந்தனர்.



இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட காங்., தலைமை அலுவலகத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட தலைவராக தமிழக காங்., தலைவர் தங்கபாலு என்னை நியமித்துள்ளார் என ராபர்ட்புரூஸ் வந்தார். அவருடன் மாவட்ட துணைதலைவர்கள் சேகர், கதிரேசன், வட்டாரதலைவர்கள் மகாலிங்கம், செல்வமணி, சங்கரநாராயணன், சேவியர்சுந்தரராஜ், தங்கராஜ், அசோகராஜ், முன்னாள் நகர தலைவர் ஐய்யப்பன், மாவட்ட பொது செயலாளர் ஜெயகுமார் ஆகியோரும் வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்து கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தினர்.



இந்த நிலையில் அலுவலகம் முன் காங்., தொண்டர்கள் கூடினர். நேரம் செல்ல செல்ல, முன்னாள் இளைஞர் காங்., தலைவர் உதயம், மற்றும் கன்னியாகுமரி சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீனீவாசன், குளச்சல் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., துணை தலைவர் ஸ்டார்வின் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் கூடினர். அவர்கள் அலுவலகத்தின் உள்ளே ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்த மாவட்ட பொறுப்பாளர் ராபர்ட்புரூஸிடம் உங்களை பொறுப்பாளராக நியமித்துள்ள கடிதத்தை காட்டுமாறு கூறினர். இதனை உங்களிடம் காட்டமுடியாது என அவர் கூறியதையடுத்து, அவரை எதிர்த்து கோஷம் இட்டவாறு வெளியே வந்தனர். மேலும் ஆலோசனை நடத்த அனுமதிக்கமுடியாது எனவும் கூறி சப்தம் போட்டுகொண்டு இருந்தனர்.



இந்த நிலையில் ஒரு சிலர் அலுவலகத்தை விட்டு வெளியேறாவிட்டால் அவர்களை உள்ளே வைத்து பூட்டு போடுங்கள் என உரத்த குரலில் கூற ராபர்ட்புரூஸ் உள்ளிட்டவர்களை அலுவலகத்தில் உள்ளே வைத்து வெளியே பூட்டுபோட்டு பூட்டினர். மேலும் அலுவலகத்திற்கு செல்லும் மின்சாரத்தையும் நிறுத்தினர். சிறிது நேரம் கழித்து பூட்டை திறந்து உள்ளே சென்ற சிலர் அங்கிருந்த முன்னாள் நகர தலைவர் ஐய்யப்பனை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு வெளியே வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உள்ள ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தவர்களையும் தூக்குவோம் என கூற, இது குறித்து நேசமணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஒரளவு குறைந்தது. இது குறித்து முன்னாள் இளைஞர் காங்., தலைவர் உதயம், மற்றும் கன்னியாகுமரி சட்டசபை இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கூறியதாவது;- தமிழ்நாடு காங்., தலைவர் தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மாவட்ட காங்., தலைவர் பதவியை அளிக்கும் உத்தரவு கொடுக்க முடியாது. இருப்பினும் நான்தான் தலைவர் எனகூறிக்கொண்டு இருக்கும் ராபர்ட்புரூஸ் அதற்கான கடிதம் காட்டவேண்டும். அவ்வாறு காட்டினால் நாங்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அதை விட்டுவிட்டு அவர் தலைவர் என கூறுவது முறையற்ற செயல். ஏற்கனவே குளச்சல் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக போட்டியிட சீட் கொடுத்துவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பறித்த சம்பவம் அணைவருக்கும் தெரிந்த விஷயம். இவ்வாறு உதயம் கூறினார்.



இது குறித்து தலைவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ராபர்ட்புரூஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது; என்னை தமிழக தலைவர் தங்கபாலு குமரி கிழக்கு மாவட்ட தலைவராக நியமித்துள்ளார். மாநில தலைவரின் அனுமதியோடு மாநில அமைப்பு செயலாளர் சிவலிங்கம் எனக்கு கடிதம் கொடுத்துள்ளார். ராஜினாமா செய்துள்ள கேரள மாநில தலைவர் அம்மாநிலத்தில் மாவட்ட தலைவர்களை நியமித்து வருகிறார். அதுபோன்று ராஜினாமா செய்து இருந்தாலும் அவர் மாவட்ட அளவிலான பதவியை நியமிக்கலாம். அவர்கள் வேண்டுமென பிரச்சனையாக்க பார்க்கின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரையில் இங்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை. வரும் காலத்தில் குமரி மாவட்டம் காங்., கோட்டையாக மிகபெரிய வளர்ச்சிபெறும். வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றியை பெறும் அளவிற்கு உள்ளாட்சி நிர்வாகிகள் அதிகம் பேர் வெற்றிபெறுவர். மாவட்டத்தில் இதுவரை காங்., கட்சிக்கு சொந்தகட்டடம் இல்லை. வரும் காலத்தில் சொந்தமான கட்டடத்தில் காங்., அலுவலகம் செயல்படும். இவ்வாறு ராபர்ட்புரூஸ் கூறினார்.



இந்த நிலையில் நேற்று மாலை மேற்கு மாவட்ட காங்., தலைவரும். எம்.எல்.ஏ., யுமான பிரின்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது;- மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று காலை ராபர்ட்புரூஸ் தன்னை குமரி கிழக்குமாவட்ட தலைவராக நியமித்துள்ளதாக கூறி சிலருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக எனக்கு தகவல் வந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் நடந்த சம்பவங்கள் மாவட்ட அளவிலும், மாநிலஅளவிலும், அகில இந்திய அளவிலும் அனைவருக்கும் தெரியும். அவர் அப்போதே குமரி மாவட்ட தலைவர் எனகூறிதான் எம்.எல்.ஏ., சீட் வாங்கிய வரலாறும் அணைவருக்கும் தெரியும். இவரது செயல்பாடு குறித்து அகில இந்தியதலைமைக்கு எடுத்து கூறியதன் அடிப்படையில் தான் அவர் நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தமியக காங்., தலைவர் தன்னை குமரி கிழக்கு மாவட்ட தலைவராக அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். அவரோ கடந்த சட்டசபை தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் எப்படி நியமனம் செய்யமுடியும். மேலும் மாநில தலைவருக்கு உத்தரவு கொடுக்கமுடியாது. பொதுவாக மாவட்ட தலைவர் நியமனத்தின் போது, மாவட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறோம். அவர்கள் கருத்துகளும் கேட்டு, நியமனம் செய்வது மரபு. இதனைவிட்டு அவர் தன்னை மாவட்ட தலைவர் என கூறுவது சுயலாபத்திற்காக தான். இது குறித்து அகில தலைமைக்கு எடுத்துக்கூறுவோம். காங்., தொண்டர்கள் எவரும் அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உண்மையான காங்., தொண்டர்களின் உணர்வுகளை அகில இந்திய தலைமை மதிக்கும். இதற்கேற்றார்போல் நாங்கள் இங்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவோம். வரும் 30ம் தேதி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் அகில இந்திய காங்., தலைவர் சோனியாகாந்தி இந்தியா வுருகிறார். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். மேலும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபிஆசாத்தையும் சந்திக்க உள்ளோம். அப்போது இது குறித்து எடுத்து கூறுவோம். இவ்வாறு பிரின்ஸ் எம்.எல்.ஏ., கூறினார். அவருடன் முன்னாள் இளைஞர் காங்., தலைவர் உதயம், குளச்சல் சட்டசபை இளைஞர் காங்., துணைதலைவர் ஸ்டார்வின் உள்ளிட்ட பலர் இருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us