/உள்ளூர் செய்திகள்/சேலம்/இடிந்து விழும் பள்ளிக்கு கட்டிடம்: எம்.எல்.ஏ., உறுதிஇடிந்து விழும் பள்ளிக்கு கட்டிடம்: எம்.எல்.ஏ., உறுதி
இடிந்து விழும் பள்ளிக்கு கட்டிடம்: எம்.எல்.ஏ., உறுதி
இடிந்து விழும் பள்ளிக்கு கட்டிடம்: எம்.எல்.ஏ., உறுதி
இடிந்து விழும் பள்ளிக்கு கட்டிடம்: எம்.எல்.ஏ., உறுதி
சேலம்: சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என, வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
சாக்கடை வசதியில்லாததால், ரோட்டில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பெண்கள் புகார் தெரிவிக்க, சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, மோட்டூர் பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் அப்படியே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் போதிய அளவு வருவது இல்லை, தெருவிளக்குகள் எரிவதில்லை, கூடுதல் விளக்குகள் அமைக்க வேண்டும், இரவில் பாம்பு நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என எம்.எல்.ஏ.,விடம் குறைகளை தெரிவித்தனர்.
அதிகாரிகளை அழைத்து தெருவிளக்கு போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார். மோட்டூர் பள்ளி கட்டிடம், சத்துணவு கூடம் மோசமாக இருப்பதை பார்வையிட்ட எம்.எல்.ஏ., இந்த கட்டிடத்தையும் இடித்து விட்டு புதியதாக கட்டுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் அசோகன், மோகன், நடராஜன், பாலு, முரளி, மாநகர் மாவட்ட அவைத்தலைவர் முகமதுஉசேன், கவுன்சிலர்கள் மாரியப்பன், மணி, கவுன்சிலர் தியாகராஜன், மாதேஸ்வரன், ராமசாமி, பாவா, தங்கராஜ், கந்தசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


