/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்
போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்
போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்
போலி தின்பண்டங்கள் விற்பனை "ஜோர்' : சிறுவர்கள் பாதிக்கும் அபாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி தின்பண்டங்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிரபல நிறுவனங்கள் தயார் செய்யும் தின்பண்டங்கள், 5 ரூபாய் மற்றும், 10 ரூபாய் விலையில் பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், தயாரிக்கும் தேதியும், காலாவாதியாகும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நகர் புறங்களில் மட்டுமன்றி கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரை வித்தியாசம் தெரியாமல் மாற்றி அதே போல் பேக் செய்து 'போலி' தின்பண்டங்களை விற்பனை செய்வது, கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இவ்வாறு போலியாக விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கும், நல்ல தின்பண்டங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் போலியானவற்றை வாங்கி அதிகம் சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு போலியாக தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் தரமற்றதாக உள்ளதால் பல நேரங்களில் சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுகிறது. போலி தின்பண்ட பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியான தேதி எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், அதனை வாங்கி உபயோகிக்கும் சிறுவர்கள், வயிறு சம்மந்தமான பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் தின்பண்டங்களை விற்பனை செய்தால், குறைவான லாபம் கிடைப்பதாகவும் ஆனால், அதே பெயரில் ஒரு எழுத்தை மாற்றி விற்பனை செய்யப்படும் போலி பாக்கெட்டுகளை விற்பனை செய்தால், எங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், மனிதர்களை பல்வேறு நோய்கள் தாக்கி வரும் வேளையில் சிறுவர், சிறுமிகளின் உடல் நிலையை சீரழிக்கும் இத்தகைய போலி தின்பண்டங்கள் விற்பனையை சுகாதார துறையினர் ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


