/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அடிப்படை வசதியில்லாத சுடுகாடு: மக்கள் அவதிஅடிப்படை வசதியில்லாத சுடுகாடு: மக்கள் அவதி
அடிப்படை வசதியில்லாத சுடுகாடு: மக்கள் அவதி
அடிப்படை வசதியில்லாத சுடுகாடு: மக்கள் அவதி
அடிப்படை வசதியில்லாத சுடுகாடு: மக்கள் அவதி
ADDED : செப் 03, 2011 12:22 AM
சாத்தூர் : அடிப்படை வசதியில்லாத சுடுகாடால்,சாத்தூர் பகுதி மக்கள் பாதிக்கின்றனர்.
சாத்தூர் வைப்பாற்றின் கரையில், நகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இங்கு இறுதி காரியங்கள் செய்ய மண்டபம் இல்லை. சுடுகாடு செல்லும் சாலையோரம் மின் கம்பங்கள் இருந்தும் விளக்குகள் இல்லை.இதனால் இரவு நேரத்தில் பாதிக்கின்றனர் இப்பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரியும் பன்றிகளாலும் துர்நாற்றம் வீசுகிறது. சமூக ஆர்வலர் எம்.முத்துகுமார் கூறுகையில்,'' நகர் பகுதியிலிருந்து 2கி.மீ.,தூரத்தில் சுடுகாடு உள்ளது. குடிநீர் வசதியில்லை.
இதன் அருகே நகராட்சி கழிவு நீரேற்றுமையம் உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. மின்விளக்கு கேட்டு, பலமுறை நகராட்சியில் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை,''என்றார்.


