ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: சச்சின் நீக்கம்; பத்ரிநாத் தேர்வு
ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: சச்சின் நீக்கம்; பத்ரிநாத் தேர்வு
ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: சச்சின் நீக்கம்; பத்ரிநாத் தேர்வு
UPDATED : செப் 05, 2011 08:04 PM
ADDED : செப் 05, 2011 05:38 PM
புதுடில்லி: கால்விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து சச்சினுக்கு பதிலாக பத்ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடி வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சச்சினுக்க 4 வார காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சச்சின் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சேவக், காம்பீர், யுவராஜ் சிங், ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, ஜாகிர் கான் ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


