/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தொடர் விடுப்பில் ஊழியர்கள்: வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் தொய்வுதொடர் விடுப்பில் ஊழியர்கள்: வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் தொய்வு
தொடர் விடுப்பில் ஊழியர்கள்: வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் தொய்வு
தொடர் விடுப்பில் ஊழியர்கள்: வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் தொய்வு
தொடர் விடுப்பில் ஊழியர்கள்: வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் தொய்வு
ADDED : செப் 09, 2011 10:56 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் சிலர், தொடர் விடுப்பில் இருந்து வருவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை என்பது தொடர் பிரச்னை. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 13 பணியிடங்களில் ஆறு பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. நிரப்பப்பட்ட பணியிடங்களில் கண்காணிப்பாளர், உதவியாளர், கணக்கர் ஆகியோர் தொடர்ந்து விடுப்பில் உள்ளனர்.இதனால் மூன்று இளநிலை உதவியாளர்கள், ஒரு தற்காலிக இளநிலை உதவியாளர் மூலம் மட்டுமே அன்றாட பணிகள் நடந்து வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடம் நிரப்பப்பட்டும், அவரும் விடுப்பில் உள்ளார். இந்த பணியிடத்தையும் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் (பொறுப்பு) கூறியதாவது: தொடர் விடுப்பில் இருக்கும் பணியாளர்கள் மீது துறைவாரி நடவடிக்கைக்கு போக்குவரத்து கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருக்கும் ஊழியர்கள் மூலம் பணிகளை விரைவில் முடிக்க முயற்சித்து வருகிறோம். இடைத்தரகர்களை நம்பாமல், அலுவலர்களை நேரடியாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


