/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக்: பொதுமக்கள் எதிர்ப்புஅகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக்: பொதுமக்கள் எதிர்ப்பு
அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக்: பொதுமக்கள் எதிர்ப்பு
அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக்: பொதுமக்கள் எதிர்ப்பு
அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக்: பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 10, 2011 03:17 AM
புவனகிரி : புவனகிரியில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க முயன்றதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.புவனகிரி முத்தாட்சி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி செல்லும் மாணவிகள், மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் அங்கு ராகவேந்திரர் கோவில் இருப்பதால் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனால் அந்தக் கடை புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாற்றப்பட்டு 3 ஆண்டிற்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த கடையை மீண்டும் முத்தாட்சி பிள்ளையார் கோவில் தெருவில் திறக்க முடிவு செய்யப்பட்டு நேற்று மாலை மினி லாரியில் பிராந்தி பாட்டில்களை கொண்டு வந்து இறக்கப்பட்டது.இதனையறிந்த அப்பகுதி மக்கள் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாதததால் பிராந்தி பாட்டில்களுடன் வந்த மினி லாரியை திருப்பி அனுப்பினர்.மீண்டும் வந்து கடையை திறந்து விடுவார்கள் என அப்பகுதி மக்கள் கடைக்கு பூட்டு போட்டு பூட்டினர்.


