/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நகை மதிப்பீட்டாளர் இடமாற்றம் பண பரிவர்த்தனை முடக்கம்நகை மதிப்பீட்டாளர் இடமாற்றம் பண பரிவர்த்தனை முடக்கம்
நகை மதிப்பீட்டாளர் இடமாற்றம் பண பரிவர்த்தனை முடக்கம்
நகை மதிப்பீட்டாளர் இடமாற்றம் பண பரிவர்த்தனை முடக்கம்
நகை மதிப்பீட்டாளர் இடமாற்றம் பண பரிவர்த்தனை முடக்கம்
ADDED : செப் 16, 2011 01:32 AM
ப.வேலூர்: சேலம், நாமக்கல் மாவட்ட இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் திடீரென இடமாற்றம செய்து, அதன் உதவிப் பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகை மதிப்பீட்டாளர்கள், மூன்று தினங்களாக பணிக்கு செல்லாததால், நகைக் கடன் மூலம் நடக்கும், பலகோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை முடங்கியுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 56க்கும் அதிகமான இந்தியன் வங்கிகள் உள்ளன. வங்கியில், சேமிப்பு கணக்கு துவங்குதல், நகை, வீட்டுக் கடன் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், நகைக் கடன் வழங்கும் பிரிவில் கமிஷன் அடிப்படையில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அந்த ஊழியர்களில், பெரும்பாலானோர் ஒரே வங்கியில் பல ஆண்டு வரை பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கட்நத 10ம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள், திடீரென இடமாற்றம் செய்து, வங்கியின் உதவிப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இது, பெரும்பாலான நகை மதிப்பீட்டாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைப்பாடி இந்தியன் வங்கிக் கிளையில் ஏற்பட்ட முறைகேடு சம்மந்தமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கியின் நகை மதிப்பீட்டாளர் பலர் கடந்த மூன்று தினங்களாக பணிக்கு செல்லவில்லை. அதனால், வங்கியில் நகைக் கடன் வழங்குவதல், பணம் திருப்பி செலுத்துதல் போன்ற அனைத்து பணிகளும் முடக்கமடைந்துள்ளன. அதனால், வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியதுடன், அதன்மூலம் நடக்கும் பல கோடி ரூபாய் வங்கி பணப் பரிவர்த்தனையும் முடக்கமடைந்துள்ளன.


