வாகன சோதனையில் சிக்கிய ரூ.3 லட்சம்
வாகன சோதனையில் சிக்கிய ரூ.3 லட்சம்
வாகன சோதனையில் சிக்கிய ரூ.3 லட்சம்
ADDED : அக் 03, 2011 03:01 AM
திருச்சி: திருச்சி அருகே போலீஸார் சோதனையில் காரிலிருந்த, கணக்கில் காட்டப்படாத 3 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது.
திருச்சி மோற்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
கடந்த சில நாட்களாக திருச்சி செக்போஸ்ட்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, நகைகள், பணம் போன்றவற்றை போலீஸார், பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி அருகே பஞ்சப்பூர் சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய செக்போஸ்டில் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த காரை போலீஸார் சோதனை நடத்தினர். காரில் மூன்று லட்சம் ரூபாய் பணம் இருந்தது. தேர்தல் விதிப்படி ஒரு லட்சத்துக்கு மேல் பணம் வைத்திருப்தால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். பணம் குறித்து காரில் வந்த ரவி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் கல்லணை பகுதியில் கான்ட்ராக்ட் பணி செய்து வருவதாக தெரிவித்தார். பணத்துக்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் போலீஸார் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


