/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காஸ் சிலிண்டர் பெறுவதில் மீண்டும் சிக்கல்காஸ் சிலிண்டர் பெறுவதில் மீண்டும் சிக்கல்
காஸ் சிலிண்டர் பெறுவதில் மீண்டும் சிக்கல்
காஸ் சிலிண்டர் பெறுவதில் மீண்டும் சிக்கல்
காஸ் சிலிண்டர் பெறுவதில் மீண்டும் சிக்கல்
ADDED : அக் 07, 2011 10:59 PM
ராமநாதபுரம் : சமையல் காஸ் சிலிண்டர் பெறுவதை ரேஷன் கார்டில், பதியாதவர்களுக்கு மீண்டும் சிக்கல் ஆரம்பித்துள்ளது.
ரேஷன் கடைகளுக்கு தற்போது மண்ணெண்ணைய் அளவு 60 முதல் 70 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மண்ணெண்ணெய் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதனால் மண்ணெண்ணைய் வழங்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இதை தடுக்க இரண்டு சிலிண்டர் வாங்கி விட்டு ஒரு சிலிண்டர் மட்டுமே பதிந்தவர்கள், சிலிண்டர் வாங்குவதை ரேஷன்கார்டில் பதியாமல் விட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
காஸ் இணைப்பு பெற வரும்போது ரேஷன்கார்டு கேட்கப்படுகிறது. இல்லாத பட்சத்தில் அவர்கள் புதிய ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளார்களா? என்பது குறித்தும், அவர்களுடைய மொபைல் எண், முகவரி போன்றவை அடங்கிய விண்ணப்பத்தில் கையெழுத்து பெறப்படுகிறது. விரைவில் இவர்கள் புதிய கார்டு வாங்காமலோ, ஏற்கனவே வாங்கிய கார்டில் பதியாமல் விட்டாலோ, அவர்களுடைய காஸ் இணைப்பை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


