/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டுமானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
ADDED : அக் 08, 2011 11:00 PM
மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு சரவணக்குமார் போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பெரியகோட்டை மேலத்தெருவில் தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டு சென்று கொண்டிருந்த போது, எறும்புடியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன் கார்த்திகேயன், 23, என்பவருக்கும், சரவணக்குமார் ஆதரவாளர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கார்த்திகேயன் அரிவாளால் சரவணக்குமார் ஆதரவாளர்களான முத்தழகு,34, தியாகராஜன்,41, தங்கவேல்,39, உடையப்பன்,41, நடராஜன்,48, ஆகியோரை வெட்டினார். காயமடைந்த 5 பேரும் சிகிச்சைச்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நடராஜன் புகாரின் பேரில் மானாமதுரை சிப்காட் போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.


