/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மின்வாரியம் தாமதத்தால் பஸ் ஸ்டாண்டு பாலம் இழுபறிமின்வாரியம் தாமதத்தால் பஸ் ஸ்டாண்டு பாலம் இழுபறி
மின்வாரியம் தாமதத்தால் பஸ் ஸ்டாண்டு பாலம் இழுபறி
மின்வாரியம் தாமதத்தால் பஸ் ஸ்டாண்டு பாலம் இழுபறி
மின்வாரியம் தாமதத்தால் பஸ் ஸ்டாண்டு பாலம் இழுபறி
ADDED : அக் 11, 2011 02:35 AM
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளிய வரும் மக்கள், ரோட்கை கடக்க ஏதுவாக அமைக்கப்பட்ட நடைபாதை மேம்பாலம் பணிகள் முடிந்த போதும், மின் கம்பிகளை உயர்த்தும் பணி இழுத்தடிப்பால், பாலம் திறப்பு தாமதமாகிறது.ஈரோடு பஸ் ஸ்டாண்துக்கு நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பஸ்களும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வந்துசெல்கின்றனர்.
வெளியூரிகளில் இருந்து, மேட்டூர்ரோடு, சக்தி ரோடு, பவானி ரோடுகளின் வழியாக பஸ் ஸ்டாண்ட் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும், ராயல் தியேட்டர் அருகில் உள்ள நுழைவாயில் வழியாக வருகின்றன.அரசு மருத்துவனை, கலெக்டர் அலுவலகம், வ.உ.சி., பார்க், மற்றும் நகரின் பிரதான ஹோட்டல்கள், லாட்ஜ்களுக்கு செல்பவர்கள் இவ்வழியாக செல்கின்றனர். இதனால் இந்த நுழைவாயிலில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசலும், பஸ் ஸ்டாண்டுக்குள் திரும்பும் பஸ்களால், விபத்தும் ஏற்படுகிறது. சிக்னல் இருந்த போதிலும், பொதுமக்கள் ரோட்டை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில் இரும்பாலான நடைபாதை மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது.இரண்டு பக்கமும் இரும்பால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, ராட்சத தூண்கள் அமைத்து, ரோட்டின் மேற்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டது. படிக்கட்டுகளையும், பாலத்தையும் இணைக்கும் பணி மட்டுமே மீதம் உள்ளது.ஆனால், பாலத்தின் மேல் பகுதியில் ஒன்றரை அடி உயரத்தில், மின் கம்பிகள் செல்கின்றன. பாலம் பணி துவங்கும் முன்பே, மின் கம்பிகளை உயரத்தை அதிகப்படுத்த மாநகராட்சி சார்பில், மின்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது, பாலம் பணி முடிந்த நிலையில், மின் துறையினர், தாமதமாக தங்கள் பணிகளை துவக்கியுள்ளனர்.


