/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலி வாக்காளர் சேர்க்கை துணை தாசில்தார் சஸ்பெண்ட்போலி வாக்காளர் சேர்க்கை துணை தாசில்தார் சஸ்பெண்ட்
போலி வாக்காளர் சேர்க்கை துணை தாசில்தார் சஸ்பெண்ட்
போலி வாக்காளர் சேர்க்கை துணை தாசில்தார் சஸ்பெண்ட்
போலி வாக்காளர் சேர்க்கை துணை தாசில்தார் சஸ்பெண்ட்
ADDED : அக் 05, 2011 02:12 AM
கோவை : நரசிம்மநாயக்கன்பாளையத்தில் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டது
தொடர்பாக, துணை தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில், 1,420 போலி வாக்காளர்கள்
சேர்க்கப்பட்டுள்ளதாக,சேர்மன் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்
ஆனந்தன் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க.,வினர் சார்பில்
மொத்தமாக தரப்பட்ட வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களை பெற்று, பட்டியலில்
பெயர் சேர்த்து விட்டதாக கூறிய அ.தி.மு.க., வினர், நேற்று முன்தினம் கோவை
வடக்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக, தொழில் துறை
அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராமன், ஆறுக்குட்டி ஆகியோரும்
கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ., சாந்தகுமார் விசாரணையில்,
மொத்தமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் வாக்காளர்கள் பெயர்
சேர்க்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கருணாகரன், வாக்காளர்
சேர்க்கைக்கு பொறுப்பான துணை தாசில்தார் ரத்தினத்தை சஸ்பெண்ட் செய்து
உத்தரவிட்டார். 'நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி வாக்காளர் பட்டியலில்
புதிதாக சேர்க்கப்பட்ட பெயர்கள் அனைத்தும் நீக்கப்படும்' என்று தேர்தல்
அதிகாரிகள் தெரிவித்தனர்.


