Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா

வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா

வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா

வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா

ADDED : செப் 08, 2011 10:30 PM


Google News
வால்பாறை : வால்பாறை கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலய தேர்த்திருவிழா நடந்து வருகிறது.

வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயம் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் இத்திருவிழாவுக்கு வருவர். இந்த ஆலயத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை மாறை மாவட்ட பொருளாளர் கனகராஜ் ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் நேற்று 'தேவத்தாயின் பிறந்த நாளையொட்டி' சிறப்பு திருப்பலியும், தேர்பவனியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நாளை (10ம் தேதி) கோவை ஆயர் தாமஸ் அங்குவிலாஸ் தலைமையில் திருவிழா திருப்பி, காணிக்கை பவனியும், இரவு 8.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தைகள் ஜெரோம், சேவியர்பயஸ் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us