ADDED : அக் 05, 2011 02:24 AM
சேலம்:சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(21).
தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுகன்யா(19). சீலநாயக்கன்பட்டியில் உள்ள
தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். மூன்று ஆண்டுகளாக காதலித்து
வந்த அவர்கள், நேற்று, அரியானூர் பகுதியில் உள்ள சடையாண்டி ஊத்து கோவிலில்
திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் தரப்பினர் எதிர்ப்பு
தெரிவித்ததால், கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.


