/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.6 கோடியில் அரசு ஐ.டி.ஐக்கள் நவீன மயம் :செல்லப்பாண்டியன்நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.6 கோடியில் அரசு ஐ.டி.ஐக்கள் நவீன மயம் :செல்லப்பாண்டியன்
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.6 கோடியில் அரசு ஐ.டி.ஐக்கள் நவீன மயம் :செல்லப்பாண்டியன்
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.6 கோடியில் அரசு ஐ.டி.ஐக்கள் நவீன மயம் :செல்லப்பாண்டியன்
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.6 கோடியில் அரசு ஐ.டி.ஐக்கள் நவீன மயம் :செல்லப்பாண்டியன்
ADDED : ஆக 30, 2011 12:04 AM
திருநெல்வேலி : நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு ஐ.டி.ஐககள் 6 கோடியில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையை சேர்ந்த மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் நடத்தினார். இதில் வேலைவாய்ப்பு பிரிவை சேர்ந்த தலைமை அலுவலக இணை இயக்குனர் ஜெயச்சந்திரன், பயிற்சி பிரிவை சேர்ந்த நெல்லை மண்டல இணை இயக்குனர் ராஜசேகரன், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலர்கள், பேட்டை, வீ.கே புதூர், அம்பை, தென்காசி, விருதுநகர், நாகர்கோவில் (மகளிர்), திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த ஜூலை மாதத்தில் எவ்வளவு பேருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை அமைச்சர் கேட்டறிந்தார். தனியார் துறையிலும் தற்போது அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது, தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் பதிவுதாரர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு பெற்று தர மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அமைச்சர் உத்தரவிட்டார். இதற்கென மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான பணியாட்களின் விபரங்களை அறிந்து நேர்முகத் தேர்வு நடத்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்பாடு செய்து பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று வழங்க அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டு கொண்டார். தூத்துக்குடியில் கடந்த 27ம் தேதி நடத்தப்பட்ட தனியார் துறையில் பணியமர்த்தும் திட்ட முகாம் போல அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நடத்த நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். பயிற்சி பிரிவின் சார்பில் தற்போது அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்க்கை நடந்து வருதால் காலியிட விபரங்களை கேட்டறிந்து அதனை பூர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அனைத்து இயந்திரங்கள் நல்ல நிலையில் இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும் என்று பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் நல்ல முறையில் செய்து தரப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பேட்டை, தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் உலக பாங்க் நிதி உதவி 3.50 கோடி செலவில் தற்போது நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. வீ.கே புதூர், தென்காசி, திருச்செந்தூர், விருதுநகர், நாகர்கோவில், நாகர்கோவில் (மகளிர்) ஆகிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2.50 கோடி செலவிலும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.


