/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,
குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,
குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,
குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,

திண்டுக்கல் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க, வேட்பாளராக, மாநில மகளிரணி தலைவி நூர்ஜகான் பேகம் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'ஆஹா! கிடைத்தது வாய்ப்பு,'என, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க, அ.தி.மு.க., தயாராகி விட்டது. அனைத்து வார்டுகளிலும், அதிருப்தியில் உள்ள தி.மு.க., நிர்வாகிகளை சரிக்கட்டி வருகின்றனர். 'கவுன்சிலர் தேர்தலில் உங்கள் இஷ்டம் போல செயல்படுங்க. நகராட்சி தலைவருக்கு, அ.தி.மு.க., வுக்கு ஆதரவு கொடுங்க,' என, கூறி வருகின்றனர்.
இதற்காக சில அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, 'ஸ்பெஷல் அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. தலையசைக்கும் தி.மு.க., வினருக்கு, 'செம கவனிப்பு' காத்திருக்கிறது. இது, அ.தி.மு.க., வை பொறுத்த வரை தேர்தல் வியூகம். இதையே எதிர்தரப்பிலோ, உள்குத்து, குழிபறிப்பு, என, விளிக்கலாம். அரசியலில் தான், ஒரே செயலுக்கு எத்தனை அர்த்தங்கள்.


