/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்
பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்
பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்
பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பிரபல பைக் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனிப்படையினர் பல்வேறு இடங்களில் பைக்கொள்ளையர்களை தேடிவந்தனர். மேலும் தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் கொள்ளையர்கள் 4 பேர் குறித்த தகவல் தனிப்படைக்கு கிடைத்தது. தகவலின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏரல் அகரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சண்முகசுந்தரம் என்ற சுரேஷ்(22), அதேபகுதியைச் சேர்ந்த துரைபாலன் மகன் பாலமுருகன்(25), தங்கத்துரை மகன் கார்த்திக்(27) மற்றும் இடையர்காட்டை சேர்ந்த குணசிங் மகன் டேவிட்(27), என்பதும், அவர்கள்தான் பைக்குகளை திருடியது என்பதும் தெரியவந்தது. போலீசாரிடம் பிடிபட்ட கொள்ளையர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுமார் ரூ,6 லட்சம் மதிப்புள்ள 22 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.


