Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்: காந்தி பேரன் பேச்சு

தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்: காந்தி பேரன் பேச்சு

தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்: காந்தி பேரன் பேச்சு

தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்: காந்தி பேரன் பேச்சு

UPDATED : செப் 02, 2011 12:37 AMADDED : செப் 01, 2011 11:41 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''தன்னலமற்ற பெண்கள் தமிழகத்தில் அதிகம்,'' என, காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணகாந்தி நேற்று பேசினார்.

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் எழுதிய, சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி.

நேஷனல் மகளிர் கல்லூரியில் நடந்தது. இதில், நூலாசிரியர் சரோஜினி வரதப்பன் வரவேற்புரை ஆற்றினார். சுயசரிதை நூலை, கோபால கிருஷ்ண காந்தி வெளியிட, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தின் பதிவாளர் சுதா சேஷையன், முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.



இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது: தமிழகத்தில் தன்னலமற்ற பெண்கள் அதிகம். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சரோஜினி வரதப்பன். தன்னை தேடி ஆயிரம் பதவிகள் வந்த போது, அவர் அதை துச்சமாக எடுத்துக் கொண்டார். அவரை பார்த்து யாரும் பொறாமைப் படவில்லை. அவரும் யாரைப் பார்த்தும் பொறாமை படவில்லை. இது தான் அவருடைய தனிச் சிறப்பு. இந்த சுயசரிதையில் அவர் எதையும் மறைக்க வில்லை. வளரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டவே, அவர் ஒளிவுமறைவு இன்றி, தனது சுயசரிதையில் எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவியரின், இசைக் கச்சேரி நடந்தது. மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தாரா கோபால கிருஷ்ணகாந்தி, பள்ளி, கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us