ADDED : ஆக 09, 2011 12:10 AM

பாளையங்கோட்டை: சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது, மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர், பூண்டி கலைவாணன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை சந்திக்க, முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின், நாளை, பாளையங்கோட்டை வருகிறார்.


