தாராபுரம்: தாராபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளின் நகர செயலாளர்கள், தங்கள் மனைவியருக்கு 'சீட்' கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் காமராஜின் மனைவி சரோஜினி, தொகுதி செயலாளர் கோவிந்தராஜின் மனைவி ஜெயந்தி, ஞானசேகரின் மனைவி கலாதேவி ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். நகர செயலார் காமராஜ் 25 ஆண்டுகளாக இப்பதவியில் உள்ளார். தொண்டர்களிடமும் இன்முகத்தோடு பழகுபவர். தற்போது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இதுவரை வாரியங்களில் கூட பொறுப்பு கொடுக்கவில்லை. நகராட்சி தலைவர் பதவி தனது மனைவிக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கையுடன் உள்ளார். தொகுதி செயலாளர் கோவிந்தராஜ் தனது மனைவிக்கு கிடைக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவை மட்டுமே நம்பியுள்ள ஞானசேகரும் சீட் பெற கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தி.மு.க.,வினரே விமர்சிக்கும் நிலையில் சூரம்பட்டி நகராட்சி உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. உங்கள் ஊர் உள்ளாட்சி பதவியில் ஐந்தாண்டுகளாக இருப்பவர்கள், 2006ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினரா? தங்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நல்லாட்சி தந்தனரா? வரும் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கப் போகும் மக்கள் பிரச்னைகள் என்ன? என்பதை அலசி ஆராயும் பகுதி இது. சூரம்பட்டி நகராட்சி அறிமுகம்: ஈரோடு மாநகரை ஒட்டியே அமைந்துள்ளது சூரம்பட்டி நகராட்சி. 18 வார்டுகளை கொண்டது. டவுன் பஞ்சாயத்தாக இருந்த இந்நகரம், 2004 ஜூன் 14ல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியுடன் இணைகிறது.
நகராட்சி எல்லை: சூரம்பட்டிவலசு, பழையபாளையம், அணைக்கட்டு ரோடு, டீச்சர்ஸ் காலனி, ஜெகநாதபுரம் காலனி, பெருந்துறை சாலை, காந்திஜி ரோடு, திரு.வி.க.,வீதி, சங்குநகர்.
உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கப் போகும் பிரச்னைகள் பற்றி சூரம்பட்டி நகராட்சி மக்கள் கூறியதாவது: பூங்கொடி (பூ வியாபாரி): சூரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மிகப்பெரிய சாக்கடை மெயின்ரோட்டுக்கு வருகிறது. சாக்கடைக்குள் மண் சேர்ந்து, அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. மெயின் ரோட்டில் கடும் துர்நாற்றம் வீசுகிறது; அதிகம் கொசு உற்பத்தியாகிறது.
வள்ளியம்மாள் (குடும்பத் தலைவி): 11 வார்டு அம்பேத்கர் வீதியில், கூலித்தொழிலாளிகளே அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள சாக்கடைக்கு தடுப்பு சுவரின்றி வருவோர், போவோர் அதிகளவில், உள்ளே விழுகின்றனர். அருகிலேயே சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளி உள்ளது. ஏனோ தடுப்பு சுவர் கட்டாமல் விட்டுள்ளனர்.
மழைக்காலத்தில் இவை வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. இப்பகுதியில் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ., நிதியின்கீழ் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் இரு பாலருக்கும் கழிப்பிடம் கட்டப்பட்டது. மின்சார இணைப்பு இல்லாமல், கழிப்பிடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
ஜெயசித்திரா (இல்லத்தலைவி): வ.உ.சி., வீதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் வார்டு கவுன்சிலர் யாரென்றே பல பேருக்கு தெரியாது. அந்தளவுக்கு வார்டு நிலைமை மோசமாக உள்ளது. நந்தகோபால் (தி.மு.க., 13வது வார்டு பிரதிநிதி): லெனின் வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழிதோண்டினர். குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
என்ன சொல்கிறார் நகராட்சி தலைவர்
சூரம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் அவலநிலை குறித்து, நகராட்சி தலைவர் லோகநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''எல்லா தகவலும் அலுவலகத்தில் கேட்டுக் கொள்ளுங்கள்,'' எனக் கூறி ஃபோனை 'கட்' செய்தார்.


