/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரிக்கைமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரிக்கை
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரிக்கை
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரிக்கை
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரிக்கை
ADDED : ஆக 08, 2011 03:45 AM
திருநெல்வேலி : மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக்(நேதாஜி) மற்றும் மூவேந்தர் மக்கள் கழகம் இணைந்து நடத்திய நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அகில இந்திய பார்வர்டு பிளாக்(நேதாஜி) மற்றும் மூவேந்தர் மக்கள் கழக இணைந்து நடத்திய நிர்வாக குழு கூட்டம் நெல்லை ஜங்ஷனில் நடந்தது.
கூட்டத்திற்கு பார்வர்டு பிளாக்(நேதாஜி) பொருளாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மூவேந்தர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். வரும் அக்டோபர் மாதம் 30ம்தேதி தேவர் ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாட வேண்டும். கந்துவட்டி, தீண்டாமை ஒழிப்பு போன்ற புகார்களை நேர்மையான முறையில் ஆய்வு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மூவேந்தர் மக்கள் கழக அவைத்தலைவர் துரைராஜ், பொருளாளர் குமார், நிர்வாகிகள் சண்முகராஜா, சங்கரபாண்டியன், முத்துக்குமார், பாலாஜி, இசக்கிமுத்து, ஆறுமுகபாண்டியன், கந்தசாமி, சுடலைமணி, சுடலை, சின்னதுரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


