/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஒரு ஆசிரியருக்கு இரு தேர்தல் பணிகள்: ரத்து செய்து ஒரு பணியை வழங்க தீர்மானம்ஒரு ஆசிரியருக்கு இரு தேர்தல் பணிகள்: ரத்து செய்து ஒரு பணியை வழங்க தீர்மானம்
ஒரு ஆசிரியருக்கு இரு தேர்தல் பணிகள்: ரத்து செய்து ஒரு பணியை வழங்க தீர்மானம்
ஒரு ஆசிரியருக்கு இரு தேர்தல் பணிகள்: ரத்து செய்து ஒரு பணியை வழங்க தீர்மானம்
ஒரு ஆசிரியருக்கு இரு தேர்தல் பணிகள்: ரத்து செய்து ஒரு பணியை வழங்க தீர்மானம்
ADDED : அக் 11, 2011 02:21 AM
திருவள்ளூர் : உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஆசிரியருக்கு இரு பணிகள் வழங்கியிருப்பதை ரத்து செய்து, ஒரு பணியை மட்டும் வழங்க வேண்டுமென கலெக்டரை வலியுறுத்தி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. மாவட்டச் செயலர் தாஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
ஊதிய முரண்பாடு குறித்து ஒவ்வொரு ஆசிரியரும் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஆசிரியருக்கு இரு பணிகள் (ஓட்டுச்சாவடி நிர்ணய அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்) என 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து, ஒரு பணியை மட்டும் வழங்க வேண்டும் என கலெக்டரை வலியுறுத்தியும், தேர்தல் வகுப்பை முறையாக நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டணியின் மாவட்டத் தேர்தல், ஆணையர் பழனிவேலன் முன்னிலையில் நடந்தது. மாவட்டத் தலைவராக பாஸ்கர், மாவட்டச் செயலராக தாஸ், பொருளாளராக ரவி, மகளிரணி செயலராக சரளா, துணைத் தலைவராக விண்ணரசி, துணைச் செயலராக பாண்டியன், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களாக முரளி, இஸ்ரேல், அமுதா, கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


