Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நேஷனல் இன்ஜி., கல்லூரியில் கல்விக்குழு கூட்டம்

நேஷனல் இன்ஜி., கல்லூரியில் கல்விக்குழு கூட்டம்

நேஷனல் இன்ஜி., கல்லூரியில் கல்விக்குழு கூட்டம்

நேஷனல் இன்ஜி., கல்லூரியில் கல்விக்குழு கூட்டம்

ADDED : ஜூலை 14, 2011 12:46 AM


Google News

கோவில்பட்டி : கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரியில் புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த கல்விக்குழு கூட்டம் நடந்தது.கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரியை 2011-12 கல்வியாண்டு முதல் தன்னாட்சி கல்லூரியாக தமிழக அரசு, புதுடெல்லி பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியன அறிவித்துள்ளது.

இதையடுத்து இக்கல்லூரியின் சார்பில் புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த கல்விக்குழு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்திற்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவரும், கல்லூரி முதல்வருமான சுப்புராஜ் வரவேற்றார். தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை தலைவர் மன்னன், கல்லூரி தேர்வாணையர் சீனிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



அப்போது பிஇ., பிடெக்., எம்.இ., மற்றும் எம்சிஏ., பட்டப்படிப்பிற்கான விதிமுறைகள், முதலாமாண்டு முதல் பருவத்திற்கான பாடத்திட்டங்கள் தேர்வு மதிப்பீடுகள் கலந்துரையாடல் நடத்தி முடிவு செய்யப்பட்டது. மேலும் இரண்டாவது பருவத்திற்கான பாடத்திட்டங்களை அடுத்த கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. கல்லூரி கல்வி வளர்ச்சி பிரிவு தலைவர் சங்கரகோமதி நன்றி கூறினார். கூட்டத்தில் கல்விக்குழு உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயபாலன், பெங்களூரு ஐபிஎம் பிளானட் சொலுயுசன்ஸ் ஸ்மார்டர் இயக்குநர் தாமேதரன், சென்னை டாடா கன்சல்டன்சி அக்கிரிடிடேஷன் தலைவர் பட்டாபிராமன், கிரஸன்ட் இன்ஜி., கல்லூரி இயக்குநர் சங்கரநாராயணன், நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேவி, சரவணன், சகாய எல்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us