/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாஜி எம்.எல்.ஏ., ராஜா மீது மீண்டும் நிலம் அபகரிப்பு புகார்மாஜி எம்.எல்.ஏ., ராஜா மீது மீண்டும் நிலம் அபகரிப்பு புகார்
மாஜி எம்.எல்.ஏ., ராஜா மீது மீண்டும் நிலம் அபகரிப்பு புகார்
மாஜி எம்.எல்.ஏ., ராஜா மீது மீண்டும் நிலம் அபகரிப்பு புகார்
மாஜி எம்.எல்.ஏ., ராஜா மீது மீண்டும் நிலம் அபகரிப்பு புகார்
ADDED : ஜூலை 12, 2011 01:27 AM
சேலம்: வீரபாண்டி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, தனது நிலத்தை அபகரிக்க
முயற்சி செய்வதாக, மாற்றுத் திறனாளி ஒருவர், சேலம் மாவட்ட எஸ்.பி.,
மயில்வாகனனிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி,
பனங்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்(50). மாற்று திறனாளியான அவர், வெள்ளி
வியாபாரம் செய்து வருகிறார். ஆண்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள 20
சென்ட் நிலத்தில், தங்கவேலுக்கு சொந்தமாக, 6,500 சதுர அடி நிலம் உள்ளது.
கடந்த 15 ஆண்டாக அந்த நிலத்தை அனுபவித்து வரும் தங்கவேலுவை, முன்னாள்
எம்.எல்.ஏ., ராஜா உள்ளிட்ட சிலர், மிரட்டி, அந்த நிலத்தை அபகரிக்க
முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி., மயில்வாகனனிடம்
தங்கவேல் அளித்துள்ள புகாரில், வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,
ராஜா, சேலம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் மாணிக்கம் மற்றும் தி.மு.க., வை
சேர்ந்த லட்சுமணன், ராஜு, பெரியசாமி, ஸ்ரீதர், ஜீவரத்தினம், சித்தையம்மாள்
உள்ளிட்ட எட்டு பேர், கடந்த 2008ம் ஆண்டு போலி பத்திரம் தயார் செய்து, என்
நிலத்தை அபகரிக்க முயன்றனர். என் வீட்டுக்கு வந்து, பொருட்களை அடித்து
நொறுக்கியதுடன், குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். ராஜா மீது போலீஸில்
புகார் செய்தேன். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை, என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து எஸ்.பி., மயில்வாகனனிடம்
கேட்டபோது, ''புகாரின் பேரில் முழுமையாக விசாரணை நடத்தி, நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என்றார். சமீபத்தில் ராஜா மீது நிலம் அபகரிப்பு தொடர்பாக
புகார் எழுந்தது. மீண்டும், அவர் மீது புகார் செய்யப்பட்டுள்ளதால்,
தி.மு.க., வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


