/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரின் ஆங்கிலத்துறை சார்பில் இலக்கிய விமர்சனம்- ஒரு புதிய அணுகுமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் ஈ.வெ.ரா., கல்லூயின் உதவி பேராசிரியர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: இலக்கிய விமர்சனம் என்பது குறை நிறை கண்டு தரம் அறிந்து வகைப்படுத்தும் ஒரு செயல்பாடுதான். உலகமெங்கும் இலக்கியம் எங்கு உள்ளதோ அங்கெல்லாம் இலக்கிய விமர்சனம் உள்ளது. இலக்கியம் மேலும் மேலும் தன்னை கூர்மைப்படுத்திக்கொண்டு முன்செல்ல இலக்கிய விமர்சனம் இல்லாமல் முடியாது. இலக்கிய விமர்சனம் நிகழாத மொழியில் இலக்கியம் அழியும். உலக இலக்கிய மரபில் என்று இலக்கியம் உருவானதோ அன்றே இலக்கிய விமர்சனம் என்ற முறையும் உருவாகிவிட்டது. மேலை இலக்கிய விமர்சகத்துக்கு அரிஸ்டாட்டில் முறைமையையும் அடிப்படைகளையும் உருவாக்கினார்.
ஒரு விமர்சகர் இலக்கிய துறையில் நன்கு தேர்ந்தவராகவும், பல்வேறு கருத்துக்களை உடையவராகவும் இருத்தல் வேண்டும். அடுத்ததாக இலக்கிய விமர்சனத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை சட்டவியல் திறனாய்வு, மதிப்பீடு திறனாய்வு, பாடவியல் திறனாய்வு, வரலாற்று முறை திறனாய்வு, ஒப்பிட்டு திறனாய்வு, ஈர்ப்புமுறை திறனாய்வு, உளவியல் திறனாய்வு என்று கூறி ஒவ்வொரு வகையையும் எடுத்துக்காட்டுடன் விளக்கினார். இறுதியில் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் பதிலளித்தார்.


