/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சொன்னதைச் செய்வேன் தி.மு.க., வேட்பாளர் பேச்சுசொன்னதைச் செய்வேன் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
சொன்னதைச் செய்வேன் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
சொன்னதைச் செய்வேன் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
சொன்னதைச் செய்வேன் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : அக் 07, 2011 10:22 PM
திண்டுக்கல் : ''மக்கள் பணிகளை சளைக்காமல் செய்து சபாஷ் பெறுவேன்,'' என, திண்டுக்கல் நகராட்சி 45 வது வார்டு தி.மு.க., வேட்பாளர் மார்த்தாண்டன் கூறினார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் அவர் பேசியது: 'சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம்' என்ற அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். பல குடிசை வீடுகள் கான்கீரிட் வீடுகளாகவும், பலருக்கு பட்டா வழங்கவும் முயற்சி எடுத்தேன். ரூ.30 லட்சம் செலவில் பைப் லைன் போடப்பட்டு, மேட்டுப்பட்டி குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. எனது வார்டில் மட்டும் ஒரு கோடி 75 லட்சம் ரூபாய்க்கு பணிகள் நடந்துள்ளது. எம்.ஜி. ஆர்., நகரில் பெண்களுக்கு கழிப்பறை, ரோடு, சாக்கடை வசதிகள் செய்து தரப்படும். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, எனது முயற்சியால் மேட்டுப்பட்டி மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. குடிநீர் பிரச்னையும் தீர்க்கப்பட்டுள்ளது. மேட்டுப்பட்டி விஸ்தரிப்பு 1 வது சந்தில் ரூ. 2 லட்சத்தில் கழிவு நீர் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. விஸ்தரிப்பு ஏரியாவில் 2 வது சந்தில் போர்வெல் வசதி செய்து, பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி மாதா கோவில் தெருவில், 1,2,3 சந்துகளில் கழிவுநீர் சாக்கடை கட்டி, சாலை வசதி ரூ. 5 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது.கிழக்கு சவேரியார் பாளையம் முதல் சந்தில் பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பட்டி விஸ்தரிப்பு ஏரியா முதல் எம்.ஜி.ஆர்.,நகர் வரை ரூ. 20 லட்சம் செலவில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., நகர் பகுதி மக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தருவேன். அரசு அறிவித்த அனைத்து நலத்திட்டங்களையும் வாங்கித் தருவேன். பொதுமக்கள் எந்தநேரமும் என்னை சந்தித்து, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம், என்றார்.


