/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் சிற்பங்கள் புதுப்பிப்புஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் சிற்பங்கள் புதுப்பிப்பு
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் சிற்பங்கள் புதுப்பிப்பு
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் சிற்பங்கள் புதுப்பிப்பு
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் சிற்பங்கள் புதுப்பிப்பு
ADDED : செப் 30, 2011 01:22 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிற்பங்கள் நவீன முறையில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழக கோயில்களில் கல் தூண்களில் காணப்படும் சிற்பங்கள், நாளடைவில் சுண்ணாம்பு, எண்ணைய், தூசு பட்டு அவற்றின் அழகு கெடுகிறது. இதை கருத்தில் கொண்டு, அதிக அழுத்த காற்றின் மூலம் சிற்பங்களை சுத்தம் செய்தனர். இதனால், சிற்பங்கள் சிதையும் நிலை ஏற்பட்டது. இதனால், இம்முறையில் சிற்பங்களை சுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது சிற்பங்கள், கல்லின் தன்மை அறிந்து, கெமிக்கல் முறையில் சுத்தம் செய்யும் பணி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்து வருகிறது. பணியில் ஈடுபட்டுள்ள கும்பகோணத்தை சேர்ந்த குணசேகரன் கூறியதாவது: கோயில் சிற்பங்கள் சிதையாமலும், கலை வண்ணம் பாதிக்காமலும் இருக்க, கல்லின் தன்மையை அறிந்து, அதற்கென குறிப்பிட்ட ரசாயன கலவையை சிலைகளில் மேல் தேய்த்து, இரு நாட்கள் ஊற வைத்து பின் , அதிக அழுத்தத்தில் தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஏற்கனவே இம்முறையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சிற்பங்களை பழமை மாறாமல் புதுப்பித்துள்ளோம், என்றார்.