ADDED : ஆக 31, 2011 01:03 AM
ஈரோடு: சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் சிலை மீது தார் ஊற்றி அவமதிப்பு செய்ததை கண்டித்து, ஈரோட்டில் நேற்று, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எம்.ஜி.ஆர்., சிலை ரவுண்டானா அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்டத் தலைவர் ரவி தலைமை வகித்தார். ராஜிவ் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிர தலைவர் ரவி, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, கவுன்சிலர்கள் விஜய பாஸ்கர், சாம்ராட் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


