ADDED : ஜூலை 13, 2011 11:55 PM
அரூர்: அரூர் அருகே இரு பைக்குகள் மோதியதில், சேலத்தை சேர்ந்த வாலிபர்
பரிதாபமாக இறந்தார்.
அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டு ரோட்டை சேர்ந்தவர்
முருகன். இவர் அரூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறது. இவரது
மகள் அனுப்பிரியா (18). இவர் அவரது தந்தையுடன் கடந்த 9ம் தேதி அரூரில்
நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பின்னர் பைக்கில்
கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். சின்னாங்குப்பம்
அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வந்த போது, எதிரே சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியை
சேர்ந்த செந்தில்குமார் (29) என்பவர் வந்த பைக் மீது மோதியது. இதில்,
முருகனுக்கு வலதுகால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அனுப்பிரியாவுக்கு காயம்
ஏற்பட்டது. செந்தில்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த
மூன்று பேரும் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல்
சிகிச்சைக்காக செந்தில்குமார் சென்னை தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். அரூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


