/உள்ளூர் செய்திகள்/மதுரை/எய்ட்சை விட கொடுமையான காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் எச்சரிக்கை தேவைஎய்ட்சை விட கொடுமையான காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் எச்சரிக்கை தேவை
எய்ட்சை விட கொடுமையான காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் எச்சரிக்கை தேவை
எய்ட்சை விட கொடுமையான காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் எச்சரிக்கை தேவை
எய்ட்சை விட கொடுமையான காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் எச்சரிக்கை தேவை
ADDED : ஆக 17, 2011 02:41 AM
மதுரை : காற்றின் மூலம் நுண்கிருமிகள் எளிதாக மற்றவர்களிடம் பரவுவதால், காசநோய், எய்ட்சை விட கொடியதாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மாவட்டத்தில் 5000 நோயாளிகள் வரை, காசநோய்க்கு தொடர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் காசநோய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், விழிப்புணர்வும் பொதுமக்களிடம் இல்லை. வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், குடும்பத்தினரை மிக
எளிதில் தாக்கிவிடும். இதில் உடல் பலவீனமானவர், ஆரோக்கியமானவர் என்ற வேறுபாடே இல்லை. தொடர் சளி, இருமலால் குழந்தைகள் பாதிக்கப்படும் போது 'பிரைமரி காம்ப்ளக்ஸ்'என்கிறோம். 15 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களை காசநோய் பொதுவாக தாக்குகிறது. என்ன அறிகுறி: தொடர்ந்து இரண்டு வாரங்கள் சளியுடன் கூடிய இருமல், பசியின்மை, மாலைநேர காய்ச்சல், எடைகுறைவு, மாத்திரைகள் சாப்பிட்டும் விடாத இருமல், சளியுடன் கூடிய ரத்தம், இருமும் போது மார்பு வலி ஏற்பட்டால் நோயின் அறிகுறியாக இருக்கலாம். வீட்டில் ஒருவர் பாதித்தாலும், மற்றவர்களும் பரிசோதனை செய்ய வேண்டும்.தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களைப் பொறுத்தவரை மதுரை மாவட்டம் மூன்றாமிடத்தில் இருந்தாலும், நிறையப் பேரை சென்றடையவில்லை.
இதுகுறித்து காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் எம்.எம்.சாமி கூறியதாவது:வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம், தொடர்ந்து ஆறுமாதங்கள் சிகிச்சை பெறவேண்டும். சிலர் மாத்திரை சாப்பிடுவதை பாதியில் விடுவதால், பிரச்னை முற்றுகிறது. மதுரை ஆஸ்டின்பட்டியில், உள்நோயாளிகளுக்கான நவீன மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மதுரை கிராமப்புறங்களில் 24 மையங்களிலும் நகர்ப்புறங்களில் 10 மையங்களில் காசநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனிநபருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் சிகிச்சைக்கு அரசு செலவிடுகிறது. தவறான உறவின் மூலமே எய்ட்ஸ் நோய் பரவும். அருகில் இருந்தாலே காசநோய் பரவும். இருமும் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ., மாநகராட்சி மருந்தகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை பெற்றால்,பரவாமல் தடுக்கலாம் என்றார்


