Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு

தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு

தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு

தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு

ADDED : அக் 06, 2011 09:31 PM


Google News
கோவை : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷித் சார்பில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிரண்டு இடங்களை பெற்ற, அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி, காந்திபுரம் கமலம் துரைசாமி அரங்கில் நடந்தது.

அமைப்பின் நகர தலைவர் செல்வகேசவன் வரவேற்றார். சிறப்பு பேச்சாளராக மாநில இணை பொருளாளர் ரமேஷ்குமார் கலந்து கொண்டார். இவர் பேசியதாவது: உலக அளவில் இந்தியர்களின் அறிவு அதிக மதிப்புடையது. அமெரிக்காவில் பணி புரியும் 52 சதவீத சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இந்தியர்கள். உலகில் மிகப்பெரிய இளைஞர் சமுதாயம் இந்தியாவில்தான் உள்ளது. மொத்த இளைஞர்களில் 62 சதவீதம் பேர் இங்குள்ளனர். எதிர்காலத்தில் இந்தியா உலகை ஆளப்போகும் நாடு என்ற உணர்வு தற்போதே பல நாடுகளிடம் வந்துவிட்டது. ஆனால் நமது முன்னேற்றத்தை ஒரு சில சமுதாய சீர்கேடுகள் குலைத்து வருகின்றன. அவற்றை கலைய வேண்டும். அதற்கான பக்குவத்தை மாணவ பருவத்திலேயே கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்குவிப்பு சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 72 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us