/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு "கவுன்ட்டர்'வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு "கவுன்ட்டர்'
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு "கவுன்ட்டர்'
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு "கவுன்ட்டர்'
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு "கவுன்ட்டர்'
ADDED : ஜூலை 28, 2011 10:05 PM
கோவை : வருமான வரி கணக்கு படிவம் தாக்கல் செய்ய, கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில், பத்து சிறப்பு கவுன்ட்டர்கள் துவக்கப்பட்டுள்ளன.
வருமான வரி கணக்கு படிவம் தாக்கல் செய்ய, வரும் 31ம் தேதி கடைசி நாள். கணக்கு படிவங்களை பெறவும், வழிகாட்டவும், கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பத்து சிறப்பு கவுன்டர்கள் துவக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. வருமான வரித்துறை முதன்மை ஆணையர் செல்லப்பன் துவக்கி வைத்தார். வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''மாத வருமானம் பெறுவோருக்கு ஆறு கவுன்ட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாக கணக்கு தாக்கல் செய்வோருக்கு உதவ இரண்டு கவுன்ட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுபவர்களுக்கு உதவி ஆணையர் தலைமையில் சிறப்பு கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர கணக்கு எண்(பான்) துவங்க விண்ணப்பிப்பவர்களுக்கும் சிறப்பு கவுன்ட்டர் உண்டு.''இங்கு உடனடியாக 'பான்' எண் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறப்பு கவுன்டர்கள் தினமும் காலை 9.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். புதிய கவுன்டர்களில் பணியமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களிடம், வருமானவரி கணக்கு தாக்கல் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.


