/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்'"கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்'
"கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்'
"கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்'
"கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்'
ADDED : அக் 08, 2011 12:14 AM
பொள்ளாச்சி : 'கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் தேர்தலுக்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும்' என, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., எச்சரிக்கை விடுத்தார்.பொள்ளாச்சி அ.தி.மு.க., தலைமை தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நகர செயலாளரும், தலைவர் பதவிக்கான வேட்பாளருமான கிருஷ்ணகுமார் வரவேற்றார்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி பேசியதாவது:சட்டசபை தேர்தலில் பொள்ளாச்சி நகரப்பகுதியில் அ.தி.மு.க.,வுக்கு எட்டாயிரம் ஓட்டுகள் அதிகம் கிடைத்தது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு வித்தியாசம் இன்னும் அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய வேண்டும்.கவுன்சிலருக்கு எனக்கு ஓட்டு போடுங்கள், தலைவருக்கு யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் என்று கட்சிக்கு விரோதமாக பிரசாரம் செய்யக்கூடாது. தலைவர், கவுன்சிலர் இருவரும் வெற்றி பெற வேண்டும்.ஒவ்வொரு வார்டிலும் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டும். கட்சிக்கு விரோதமாக கட்சியினர் செயல்பட்டால் தேர்தலுக்கு பிறகு முதல்வர் ஜெ., கடுமையாக நடவடிக்கை எடுப்பார்.பொள்ளாச்சியில் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறவேண்டும், 36 வார்டுகளிலும் அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வேண்டும் என்றார்.மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம் பேசினார். கூட்டத்தில் 36 வார்டு வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


