Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புவனத்தில் "டிரான்ஸ்பார்மர்' மாற்ற வீடுகளில் வரிவசூலிப்பு

திருப்புவனத்தில் "டிரான்ஸ்பார்மர்' மாற்ற வீடுகளில் வரிவசூலிப்பு

திருப்புவனத்தில் "டிரான்ஸ்பார்மர்' மாற்ற வீடுகளில் வரிவசூலிப்பு

திருப்புவனத்தில் "டிரான்ஸ்பார்மர்' மாற்ற வீடுகளில் வரிவசூலிப்பு

ADDED : ஆக 22, 2011 12:00 AM


Google News
திருப்புவனம் : திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பழுதாகும் மின்வாரிய டிரான்ஸ்பார்மர்களை மாற்ற அதிகாரிகள் பணம் வசூலிப்பதால், வீடுகளுக்கு வரி விதித்து பணம் திரட்டுகின்றனர்.திருப்புவனம், திருப்பாச்சேத்திக்குட்பட்ட கிராமங்களில், பழைய டிரான்ஸ்பார்மர்கள் அதிகளவில் உள்ளன.

இவை, மழைக்காலங்களில் ஏற்படும் இடி இடித்தல், விதிகளை மீறி மின்மோட்டார்களில் 'கன்டென்ஷர்' பயன்படுத்தும் விவசாயிகளால், டிரான்ஸ்பார்மர்கள் எளிதில் பழுதாகின்றன.இது போன்று பழுதாகும் டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக மாற்ற மின்வாரியம் முன்வருவதில்லை. இதனால், கிராம மக்கள், விவசாயிகள் அத்தியாவசிய தேவையான மின்சாரமின்றி சிரமம் அடைகின்றனர். எனவே, உடனே புதிய டிரான்ஸ்பார்மர் மாற்றக்கோரி மின்துறையில் மனுசெய்கின்றனர்.ஆனால், இங்கு ஊழியர்கள் பற்றாக்குறை, டிரான்ஸ்பார்மர் கையிருப்பு இல்லை எனக்கூறி மின்வாரிய அதிகாரிகள், கிராம மக்களை தட்டிக்கழிக்கின்றனர்.வரி வசூலிப்பு: உடனடியாக டிரான்ஸ்பார்மர் மாற்ற, பணம் செலவழிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மின்தேவையை கருத்தில் கொண்டு கிராமத்தினர், வீட்டுக்குவீடு வரி விதித்து பணம் திரட்டுகின்றனர். வரி விதிப்பு மணல்மேடு, செல்லப்பனேந்தல், வன்னிகோட்டை, கொத்தங்குளம் கிராமங்களில் நடந்துள்ளது. இது போன்று மின்வாரிய அதிகாரிகளின் முறைகேட்டுக்கு, கலெக்டர் ராஜாராமன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us