Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊராட்சி உதவியாளர்கள் முதல்வருக்கு நன்றி

ஊராட்சி உதவியாளர்கள் முதல்வருக்கு நன்றி

ஊராட்சி உதவியாளர்கள் முதல்வருக்கு நன்றி

ஊராட்சி உதவியாளர்கள் முதல்வருக்கு நன்றி

ADDED : ஆக 30, 2011 12:46 AM


Google News
உடுமலை : ஊராட்சி உதவியாளர்களை செயலாளராக பதவி உயர்வு செய்த முதல்வருக்கு உடுமலை ஒன்றிய தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர் சங்க கிளை நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி உதவியாளர்கள் சங்க கூட்டம் பொருளாளர் தேவராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி, ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கையில், தமிழக முதல்வர் ஊராட்சி உதவியாளர்கள் அனைவரையும் செயலாளராக பதவி உயர்வு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, ஊராட்சி செயலராக பதவி உயர்வு வழங்கிய முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும், அனைத்து அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தல், நன்றாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. பாலாஜி நன்றி கூறினார். ஊராட்சி உதவியாளர்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us