வாபஸ் பெறவந்த தே.மு.தி.க.வேட்பாளர்: தடுத்து நிறுத்திய நிர்வாகிகள்
வாபஸ் பெறவந்த தே.மு.தி.க.வேட்பாளர்: தடுத்து நிறுத்திய நிர்வாகிகள்
வாபஸ் பெறவந்த தே.மு.தி.க.வேட்பாளர்: தடுத்து நிறுத்திய நிர்வாகிகள்
ADDED : அக் 03, 2011 04:06 PM
மதுரை: மதுரை உசிலை ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு செய்த தே.மு.தி.க. வேட்பாளர் இன்று தனது வேட்புமனுவை வாபஸ் வாங்க முயன்றதை தே.மு.தி.க. நிர்வாகிகள் தடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக தே.மு.தி.க. வைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மனுவை வாபஸ் வாங்க கடைசிநாள் என்பதால் தனது வேட்பு மனுவை இன்று 2.55 மணியளவில் திடீரென வாபஸ் வாங்க வந்துள்ளார். அப்போது அவருடன் வந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வேட்புமனுவை வாபஸ் வாங்கவிடாமல் தடுத்தனர். அப்படியும் அவர் தேர்தல் அலுவலக கட்டடசுவரை தாண்டி குதித்து உள்ளே சென்றுவேட்பு மனுவை வாஸ் வாங்க முயன்றார். எனினும் கடைசி நேரத்தில் வேட்பு வாபஸ் பெறவிடாமல் தடுத்து அவரை அங்கிருந்து வலுகட்டாயமாக அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


