பாக்., விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாக்., விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பாக்., விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 08, 2011 03:15 AM
இஸ்லாமாபாத் : பாக்., ஏர்லைன்ஸ்சின் இரண்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இஸ்லாமாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு சென்ற விமானத்தின் விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, விமானம் அவசரமாக துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 378 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோதனையில் புரளி என தெரியவந்ததை தொடர்ந்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். அதேபோல், இஸ்லாமாபாத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேநேரம், விமானம் கோலாலம்பூர் சென்றடைந்தது. சோதனையில் அதுவும் புரளி என கண்டறியப்பட்டது.


